மாவட்ட செய்திகள்

குடும்பத்தினர் பேச மறுத்ததால்- காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை + "||" + Made with love The woman committed suicide

குடும்பத்தினர் பேச மறுத்ததால்- காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

குடும்பத்தினர் பேச மறுத்ததால்- காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
குடும்பத்தினர் பேச மறுத்ததால் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை ஜீவாநகர் செயின்பால்பேட் பகுதியை சேர்ந்தவர் அங்காளன் (வயது 65). கொத்தனார். இவரது இளையமகள் சசிரேகா(25) பி.ஏ. படித்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக நேரு வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் மேல் படிப்பு படிப்பதாக கூறி சென்னைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் செல்போனில் குடும்பத்தினருடன் பேசி வந்தார்.


இந்தநிலையில் சசிரேகா துணிக்கடையில் தன்னுடன் வேலை செய்த முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த இஸ்ஷாக் (52) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது பெயரையும் ஆயிஷா என மாற்றிக் கொண்டார். இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. கோவிந்தசாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இஸ்ஷாக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

இது அங்காளனுக்கு தெரியவந்ததையடுத்து தனது மகளிடம், ஏன் இப்படி துரோகம் செய்து விட்டாய் என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு குடும்பத்தினர் யாரும் ஆயிஷாவிடம் பேச மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஆயிஷா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேப்பந்தட்டை அருகே, திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
வேப்பந்தட்டை அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
2. ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. பரப்பாடி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை
பரப்பாடி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. சுசீந்திரம் அருகே, கடன் தொல்லையால் பெண் தற்கொலை
சுசீந்திரம் அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
5. குறிஞ்சிப்பாடி அருகே, 2 குழந்தைகளை எரித்துக்கொன்று தாய் தற்கொலை
குறிஞ்சிப்பாடி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் தனது 2 குழந்தைகளை எரித்துக்கொன்று, தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...