சோனியாகாந்தியின் பிறந்தநாளையொட்டி: மணக்குள விநாயகர் கோவிலில் - காங்கிரசார் தங்கத்தேர் இழுத்தனர்


சோனியாகாந்தியின் பிறந்தநாளையொட்டி: மணக்குள விநாயகர் கோவிலில் - காங்கிரசார் தங்கத்தேர் இழுத்தனர்
x
தினத்தந்தி 10 Dec 2019 5:30 AM IST (Updated: 10 Dec 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

சோனியாகாந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரசார் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.

புதுச்சேரி,

சோனியாகாந்தியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரசார் தங்கத்தேர் இழுத்தனர்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு தங்கத்தேர் இழுத்து பிரசாதம் வழங்கினார்கள். மேலும் நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறுமுகம், ராகுல்காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ.சேகர், புதுவை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி என்ற கோபாலமூர்த்தி, ராகுல்காந்தி தேசிய பேரவை துணைத்தலைவர் திருவேங்கடம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பிரம்மாண்டமான கேக்கினை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், வீரமுத்து, கருணாநிதி, தனுசு, சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story