சித்தராமையா ராஜினாமா செய்திருப்பது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இனிப்பான செய்தி - பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. பேட்டி


சித்தராமையா ராஜினாமா செய்திருப்பது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இனிப்பான செய்தி - பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2019 4:57 AM IST (Updated: 11 Dec 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்திருப்பது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இனிப்பான செய்தியாகும் என்று பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஹாவேரி மாவட்டம் இரேகெரூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு பி.சி.பட்டீல் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளார். அவருக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது. போலீஸ் துறையை தனக்கு வழங்கும்படி பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ, முதல்-மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், இரேகெரூரில் நேற்று பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள், எங்களை தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் என்று கூறி வந்தனர். ஆனால் இடைத்தேர்தலில் எங்களை மக்கள் வெற்றி பெற செய்து தகுதி உள்ள எம்.எ ல்.ஏ.க்களாக மாற்றி உள்ளனர். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்று பா.ஜனதாவை ஆதரித்து மக்கள் வாக்களித்துள்ளனர்.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் 9-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று சித்தராமையா தேர்தல் பிரசாரத்தில் கூறி வந்தார். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்திருக்கிறார்.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது மாநில மக்களுக்கு இனிப்பான செய்தி வழங்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார். தற்போது சித்தராமையா ராஜினாமா செய்திருப்பது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும். இந்த இனிப்பான செய்தியை தருவதாக தான் மல்லிகார்ஜுன கார்கே முன்பே கணித்து சொல்லி இருக்கிறார்.

30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். தற்போது தான் மந்திரியாக உள்ளேன். எந்த துறையை கொடுத்தாலும் நான் நிர்வகிப்பேன். குறிப்பிட்ட துறையை கொடுக்கும்படி நான் கேட்பதாக வரும் தகவல் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story