காஞ்சீபுரம் அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை


காஞ்சீபுரம் அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 Dec 2019 4:00 AM IST (Updated: 12 Dec 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த மாகரல் வல்லமேடு பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். இவர் காஞ்சீபுரத்தை அடுத்த ஒரகடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, ரம்யா (வயது 30). எம்.பில் பட்டதாரியான இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சீனிவாசனும், ரம்யாவும் கார்த்திகை தீபத்தையொட்டி, ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல புறப்பட்டனர். அப்போது ரம்யாவின் மாமனார் எனக்கு சாப்பாடு கொடுத்து விட்டு செல் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ரம்யா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தற்கொலை குறித்து மாகரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story