மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடியில், 3 நாட்களில் 633 பேர் வேட்புமனு தாக்கல் + "||" + Rural Local Elections: Tuticorin In 3 days 633 candidates have filed nominations

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடியில், 3 நாட்களில் 633 பேர் வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடியில், 3 நாட்களில் 633 பேர் வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 3 நாட்களில் 633 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 12 பஞ்சாயத்து யூனியனில் உள்ள 174 வார்டு உறுப்பினர், 17 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 403 பஞ்சாயத்து தலைவர், 2 ஆயிரத்து 943 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆக மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 1,542 பதவிகளுக்கும், 2-வது கட்டமாக 1,995 பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் 176 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். 3-வது நாளாக நேற்று மனு தாக்கல் நடந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 211 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 229 பேரும் ஆக மொத்தம் 457 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 3 நாட்களில் மொத்தம் 633 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை மனு தாக்கல் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி: அதிமுக 14 இடங்களிலும் திமுக 12 இடங்களில் வெற்றி
27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 14 இடங்களிலும் திமுக 12 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
2. மறைமுகத் தேர்தல்: அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்
மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
3. ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. 12 மணி நிலவரம் : உள்ளாட்சி மறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்
மதுரையில் அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.
5. ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கியது: பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது
ஊரக உளளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது