திருவண்ணாமலை பள்ளியில் அரையாண்டு தேர்வு நடப்பதை கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலை பள்ளியில் அரையாண்டு தேர்வு நடப்பதை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 8:30 PM GMT)

திருவண்ணாமலை பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவதை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மகாதீபத்திருநாளை தொடர்ந்து நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு நடந்தது.

திருவண்ணாமலையை அடுத்த நார்த்தாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலையில் பிளஸ்-2 தமிழ் தேர்வு நடைபெறுவதை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் உடன் இருந்தார். இதையடுத்து பிற்பகலில் தேர்வு எழுத காத்திருந்த பிளஸ்-1 மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

போளூர் ஆண்கள், பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சாணாரப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலையில் பிளஸ்-2 மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுதுவதையும், பிற்பகலில் அத்திமூர் அரசு மேல்நிலைப்பள்ளி கலசபாக்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதையும் போளூர் கல்வி மாவட்ட அலுவலர் கலைவாணி ஆய்வு செய்தார். ஆய்வின் போது சாணாரப்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் உள்பட தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story