சுரண்டை பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
சுரண்டை பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்.
சுரண்டை,
சுரண்டை அண்ணாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இதையடுத்து கடந்த 4 நாட்களாக அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று சுரண்டை அண்ணாநகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிகரன், சங்கரன்கோவில் சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அபுல்கலாம் ஆசாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர் கணேசன், வருவாய் அலுவலர் மாரியப்பன் உள்பட பலர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story