மொத்த மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு வெங்காயம் விலை குறைகிறது


மொத்த  மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு   வெங்காயம்  விலை  குறைகிறது
x
தினத்தந்தி 12 Dec 2019 3:30 AM IST (Updated: 12 Dec 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

மொத்த மார்க்கெட்டுக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள் ளதால், அதன் விலை குறைய தொடங்கி உள்ளது.

மும்பை,

வெங்காயத்தை உரித்தால் மட்டுமே வழக்கமாக கண்களில் கண்ணீர் வரும். ஆனால் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தை நினைத்து பார்த்தாலே கண்ணீர் வருகிற அளவுக்கு அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மும்பையில் நேற்று வரை கிலோ வெங்காயம் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் வாஷியில் உள்ள ஏ.பி.எம்.சி. மொத்த மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை குறைந்து உள்ளது.

நேற்று முன்தினம் மொத்த விலை கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்த விலை மார்க்கெட்டிற்கு வெங்காய வரத்து அதிகரித்து உள்ளதாலே அதன் விலை குறைந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்தவிலை குறைவு சில்லறை விலை கடைகளில் எதிரொலிக்க இன்னும் 2 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

வரத்து அதிகரிப்பு

இது குறித்து வாஷி மார்க்கெட் வெங்காய வியாபாரி அசோக் கர்பே கூறுகையில், “மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகரித்து உள்ளது. இன்று(நேற்று) மட்டும் 140 லாரிகள் வந்துள்ளன. இந்த வெங்காயங்கள் நாசிக், குஜராத்தில் இருந்து வந்துள்ளன. மேலும் இஸ்ரேல், கஜகஸ்தானில் இருந்தும் வெங்காயம் வந்துள்ளன. இன்னும் 10 நாட்களில் மாலேகாவ் உள்ளிட்ட மராட்டியத்தின் பிற பகுதிகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் வர உள்ளது” என்றார்.

இதுபற்றி மற்றொரு வியாபாரி கூறும்போது, “தற்போது நாங்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய வெங்காயத்தை சில்லறை விலைக்கு விற்று வருகிறோம். இன்னும் 2 நாட்களில் சில்லறை விலை வெங்காயத்தின் விலையும் குறையும்” என்றார்.

வெங்காயத்தின் விலை குறைவு குறித்த செய்தி மும்பையில் இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story