உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற சிறப்பாக பணியாற்ற வேண்டும் - பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம்


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற சிறப்பாக பணியாற்ற வேண்டும் - பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Dec 2019 4:15 AM IST (Updated: 13 Dec 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு, 

பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராசு, மாநில முன்னாள் பொறுப்பாளர் பொ.வை.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருள்மொழி, ராஜேந்திரன், நல்லசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் வெங்கடாசலம், எஸ்.எல்.பரமசிவம், என்.ஆர்.வடிவேல், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக்முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்கும் ஈரோடு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது.

உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற சிறப்பாக பணியாற்றுவது.

ஈரோடு மாநகர் மாவட்டத்தில் பா.ம.க.வின் முப்படைகளான அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை ஆகியவற்றை அமைக்க தீவிரமாக செயல்படுவது.

அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டை சிறப்பாக நடத்த ஈரோடு மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, மாநாட்டில் ஏராளமான பெண்களை கலந்துகொள்ள வைக்க வேண்டும்.

இந்த கூட்டத்தில் இளைஞர் அணி துணைச்செயலாளர் சிவன், துணை அமைப்பு செயலாளர் ஏ.ஜி.எஸ்.கோபால், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மத்திய மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட துணை அமைப்பு செயலாளர் இந்து ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Next Story