மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை + "||" + Villupuram tragedy: 5 members of the same family commit suicide

விழுப்புரத்தில் சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை

விழுப்புரத்தில் சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,

விழுப்புரம் சித்தேரி கரையை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் அருள் (வயது 33), நகை தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி(26). இவர்களுக்கு பிரியதர்‌ஷினி(5), யுவஸ்ரீ(3) மற்றும் 3 மாத கைக்குழந்தையான பாரதி என்று 3 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்தனர். .

இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது நகை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு சாப்பிட்டு அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த 5 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...