பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் வடமாநில முதியவர் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத்தை சோ்ந்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை,
கோவையை சேர்ந்த 13 வயது மாணவி மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி செல்லும்போது மர்ம நபர் ஒருவர் தன்னை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினார்.
உடனே அந்த ஆசிரியை மாணவியின் பெற்றோருக்கு தகவல் தொிவித்தார். இதையடுத்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டு இருந் தார். அப்போது மாறுவேடத்தில் பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவியை, அந்த மர்ம நபர் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
உடனே பெண் போலீசார் அந்த மர்ம நபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜு (வயது 60) என்பதும், இவர் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்ததும், குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு திரும்பி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜு வை, கைதுசெய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story