மாவட்ட செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு + "||" + In Thiruthiraipoondi Collector's Survey at Voting Counting Center

திருத்துறைப்பூண்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
திருத்துறைப்பூண்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட 258 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 32 கிராம ஊராட்சிக்கும், 16 ஊராட்சி ஒன்றிய வார்டுக்கும், 1 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கும் வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை திருவாரூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணும் அறை, வாக்குப்பெட்டிகள் வைக்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

தொடர்ந்து சாய்வு தள வசதி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை தொடர்ந்து கண்காணித்து தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கும் படி அலுவலர்களுக்கு கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், தாசில்தார் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருத்துறைப்பூண்டி நகரம் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருத்துறைப்பூண்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. எனவே புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.