கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு, 4 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை - 23 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு


கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு, 4 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை - 23 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 9:15 PM GMT)

23 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை தலைவராக ராஜா என்பவரும், செயலாளராக லிங்கவேல் என்பவரும், சரக மேற்பார்வையாளராக பாலுச்சாமி என்பவரும், உதவியாளராக ஆண்டவர் என்பவரும் பணிபுரிந்தனர். அப்போது அவர்கள் சங்க நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 88 ஆயிரத்து 473-ஐ கையாடல் செய்தனர்.

இது தொடர்பாக கடந்த 1996-ம்ஆண்டு சிவகங்கை மாவட்ட வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு பாரததேவி குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story