பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது
பகாமஸ் நாட்டில் இருந்து ஆடம்பர சொகுசு சொகுசு கப்பல் 551 பயணிகளுடன் சென்னை வந்தது.
சென்னை,
பகாமஸ் நாட்டை சேர்ந்த ‘சீபோர்ன் ஓவேஷன்’ என்ற ஆடம்பர சொகுசு கப்பல் நேற்று சென்னை வந்தது. அதில் 551 பயணிகள் மற்றும் 429 சிப்பந்திகள் உள்ளனர். இந்த கப்பல் சென்னை துறைமுகத்தின் நவீனமயமாக்கப்பட்ட சொகுசு கப்பல் பயணிகள் வசதி மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடைபயிற்சி பாதை, நீச்சல் குளம், உடற்பயிற்சி செய்யும் இடம், அழகுக்கலை கூடம், ஓட்டல், கருத்தரங்குகளுக்கான அறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கப்பலில் உள்ளன. முன்னதாக இந்திய சுற்றுலாத்துறை சார்பில் சொகுசு கப்பலில் வந்த பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் வந்த பயணிகள் மற்றும் சிப்பந்திகளை வரவேற்ற சென்னை துறைமுக கழக தலைவர் பி.ரவீந்திரன், சென்னையின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று பின்னணிகளை அவர்களிடம் எடுத்துக்கூறினார்.
இந்த கப்பலில் வந்தவர்கள் சென்னை, மாமல்லபுரம் மற்றும் காஞ்சீபுரத்தை சுற்றி பார்த்தனர். இந்த கப்பல் இன்று (சனிக்கிழமை) இலங்கையின் திரிகோணமலைக்கு புறப்பட்டு செல்கிறது.
Related Tags :
Next Story