மாவட்ட செய்திகள்

வாலாஜாபாத்தில்பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை + "||" + Public demand for repair of dilapidated road

வாலாஜாபாத்தில்பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்தில்பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வாலாஜாபாத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்கு உள்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பல்லாயிரக்கணக் கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வாலாஜாபாத் நகரின் முக்கிய சாலையாக விளங்குவது ராஜ வீதி சாலை. இந்த சாலையில் நாள் தோறும் அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜ வீதி சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழுதடைந்த சாலையில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.