மாவட்ட செய்திகள்

வாடிப்பட்டி அருகே வாலிபர் கொலை: 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை + "||" + Youth killed near Wadipatti: Police investigate 6 people

வாடிப்பட்டி அருகே வாலிபர் கொலை: 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

வாடிப்பட்டி அருகே வாலிபர் கொலை: 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
வாடிப்பட்டி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மகன் பாண்டி(வயது 23). இவர் கோவையில் தனியார்கம்பெனியில் வெல்டிங் வேலை செய்து வந்தார். கார்த்திகை தீபதிருவிழாவில் கலந்துகொள்ள விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு குலசேகரன்கோட்டை கோம்பை கரடு பகுதியில் கண்மாய் கரையில் கழுத்துஅறுக்கப்பட்டு வயிற்றில்கத்திகுத்துகாயத்துடன் கொலைசெய்யப்பட்டு கிடந்தார்.

தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்தனர்.

சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் சம்பவஇடத்தைபார்வையிட்டார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உமாமகேஷ்வரி, கேசவராமசந்திரன், ஏட்டுகள் பெரியகருப்பன், ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

மேலும் குடிபோதை தகராறில் இந்தகொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தகொலை சம்பந்தமாக 6 பேரை பிடித்து வந்து விசாரணைசெய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறையில் வாலிபர் கொலை: வேதாரண்யம் கோர்ட்டில் ஒருவர் சரண்
மயிலாடுதுறையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய ஒருவர் வேதாரண்யம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
2. பாலக்கோடு அருகே வாலிபர் கொலை: மாமனார் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை
பாலக்கோடு அருகே வாலிபர் கொலை தொடர்பாக மாமனார் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. முன்விரோத தகராறில், வாலிபரை கொலை செய்த 4 பேர் கைது - தங்கையுடன் பழகியதால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
வேலூரில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...