மாவட்ட செய்திகள்

வேடசந்தூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு + "||" + Collector Study at Voting Counting Center at Vedasandur

வேடசந்தூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

வேடசந்தூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
வேடசந்தூரில், வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.
வேடசந்தூர், 

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 15 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் 186 வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கலெக்டர் விஜயலட்சுமி நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்த ஓட்டுப்பெட்டிகள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியை அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தோணியார், பா.விஜயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா, வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதேபோல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 217 வார்டு உறுப்பினர் பதவிக்கும் வருகிற 27-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளரும், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலருமான கவிதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் லாரன்ஸ், மலர்விழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...