மாவட்ட செய்திகள்

திருமயத்தில் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் + "||" + Relatives say that there is a mystery in the death of the young man found dead in the well

திருமயத்தில் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்

திருமயத்தில் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
திருமயத்தில் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமயம்,

திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் காதர் இப்ராஹிம் என்கிற அசார் (வயது 22). இவர் கடந்த 12-ந் தேதி இரவு காட்டுபாவா பள்ளிவாசலில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இவருக்கும், வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த போலீசார் அவர்களை கண்டித்து அனுப்பினர். ஆனால் அதன் பின்னர் காதர் இப்ராஹிம் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.


இந்நிலையில், நேற்று காதர் இப்ராஹிம், பள்ளிவாசல் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து காதர் இப்ராஹிம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில், காதர் இப்ராஹிம் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திருமயம் ஸ்டேட் வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், திருமயம் துணை தாசில்தார் கனகவேல் மற்றும் திருமயம் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காதர் இப்ராஹிம் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இந்த வழக்கை வருவாய் கோட்டாட்சியர் மூலம் விசாரிக்க வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இதுகுறித்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் சாவு
பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் பரிதாபமாக இறந்தார்.
2. தேவையூர் கிராமத்தில் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு
தேவையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.
3. உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
4. பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு
நெமிலி அருகே இளம்பெண்ணின் உடலை தோண்டிஎடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
5. தூக்குப்போட்டு பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது
பேரளம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.