மாவட்ட செய்திகள்

மொபட்டில் மணல் கடத்தல்; 2 பேர் கைது + "||" + Sand trafficking in Mopat; 2 arrested

மொபட்டில் மணல் கடத்தல்; 2 பேர் கைது

மொபட்டில் மணல் கடத்தல்; 2 பேர் கைது
சங்கரன்கோவிலில் மொபட்டில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில், 

கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் மேல மரத்தோணி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மொபட்டில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர்கள் மேல மரத்தோணியை சேர்ந்த வேல்முருகன் மகன் காளிராஜ் (வயது 25), மூக்கையா மகன் ராமசந்திரன் (23) என்பதும், மொபட்டில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, மணல் கடத்த பயன்படுத்திய மொபட்டை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்தல் - 2 டிரைவர்கள் கைது
வேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்திய 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
2. மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது
மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. கோவை பஸ் நிலையத்தில், போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறிப்பு - 2 பேர் கைது
கோவை பஸ்நிலையத்தில் போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. ஆம்பூர் அருகே பயங்கரம்: நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை
ஆம்பூர் அருகே நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டியை மயக்க ‘ஸ்பிரே’ அடித்து கொலை செய்த பேரன் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.