திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 906 பேர் வேட்பு மனு தாக்கல்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 4 ஆயிரத்து 906 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி, 30-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு 17 உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 295 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊரக பகுதியில் மொத்தம் 9 லட்சத்து 95 ஆயிரத்து 765 வாக்காளர்கள் உள்ளனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், மற்ற பதவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை3 ஆயிரத்து 670பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று ஒரே நாளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு936பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு156பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு125பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு19 பேரும்என மொத்தம் ஆயிரத்து1,236பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.மாவட்டத்தில் நேற்று பரவலாக தூறலுடன் மழை பெய்தது. இதனால் வேட்பு மனு தாக்கல் மந்த மாகவே இருந்தது.
நேற்று வரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரத்து 552 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 861 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 448 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 45 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 906 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.

Related Tags :
Next Story