எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய போலீஸ்காரர்


எழும்பூர் ரெயில் நிலையத்தில்   ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய போலீஸ்காரர்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:42 PM GMT (Updated: 14 Dec 2019 11:42 PM GMT)

எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை போலீஸ்காரர் காப்பாற்றினார்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 4-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. அப்போது, ஆண் பயணிகள் இருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றனர். அதில் ஒருவர் ஏறிவிட்டார். மற்றொருவர் ஏற முயன்ற போது கால் தவறி தண்டவாளத்துக்கும், ரெயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு அந்த ஆண் பயணியை பிடித்து வெளியே இழுத்து உயிரை காப்பாற்றினார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் அந்த பயணி அதிர்ச்சியில் பேச முடியாமல் திகைத்து நின்றார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அதிர்ச்சியில் பேச முடியாமல் நின்றதால் பயணியின் விவரம் குறித்து போலீசார் கேட்கவில்லை என்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருந்த பயணிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணனை வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவத்தால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Next Story