பள்ளிப்பட்டில் சாலையை அடைத்தபடி செல்லும் கரும்பு வாகனங்கள் - வாகன ஓட்டிகள் அவதி
பள்ளிப்பட்டில் சாலையை அடைத்தபடி செல்லும் கரும்பு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், 3 தொடக்கப்பள்ளிகள், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கால்நடை ஆஸ்பத்திரி, வேளாண்மை அலுவலகம் உள்பட பல அரசு அலுவலங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் ஆயிரக் கணக்கான மாணவ-மாணவிகள் இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தினந் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் பள்ளிப்பட்டு நகர தெருக்கள் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். மேலும் நூற்றுக் கணக்கான இரு சக்கர வாகனங்கள், கார், லாரிகள், அதிக பாரத்துடன் வருகிற வாகனங்கள், பல பகுதிகளுக்கு வந்து செல்லும் பஸ்கள் என எப்போதும் நகர தெருக்கள் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சாணாகுப்பம் என்ற இடத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கி உள்ளது. இதனால் பள்ளிப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த கரும்பை வாகனங்களில் ஏற்றி பள்ளிப்பட்டு நகர தெருக்களின் வழியாக இந்த சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்கின்றனர்.
அப்படி கொண்டு செல்லும்போது அளவுக்கு அதிகமாக வாகனத்தின் இருபுறமும் சாலையை அடைத்தபடி கரும்பை அடுக்கி கொண்டு செல்கின்றனர். இதனால் பள்ளிப்பட்டு தெருக்களில் இந்த வாகனங்கள் கடக்கும் போது எதிரே எந்த வாகனம் வந்தாலும் உடனடியாக கடந்து செல்லமுடியாமல் நெரிசலுக்குள்ளாகின்றன.
நேற்று காலை அதிக பாரம் ஏற்றி வந்த 2 கரும்பு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பள்ளிப்பட்டுக்குள் நுழைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வாகனங்கள் மெயின்ரோடு, பேரித்தெரு, பஸ்நிலையம், சித்தூர் ரோட்டை கடந்து ஆந்திர எல்லை வரை வழி நெடுகிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் திணறினார்கள். இதனால் அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இந்த அவதி தினந்தோறும் தொடருவதால் பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுத்து பகலில் அதிக பாரத்துடன் வருகிற கரும்பு வாகனங்களை ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்தி இரவு 8 மணிக்கு மேல் ஊருக்குள் நுழையும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்த அறிவிப்பு பலகைகள் கடந்த ஆண்டு நகர எல்லைகளில் வைக்கப்பட்டு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் அறிவிப்பு பலகைகள் வைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story