சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்த தொழிலாளி கைது
காஞ்சீபுரம் அடுத்த மாகரலை சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்த தொழிலாளி கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த மாகரலை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த 40 வயது பெண்ணை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் சக்திவேலிடம் கேட்டதற்கு ’நான் உன்னை படம் பிடிக்கவில்லை என்று கூறி தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் மாகரல் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தார். கைது செய்யப்பட்ட சக்திவேலை போலீசார் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story