முகூர்த்த நாளையொட்டி: காய்கறி விலை கடந்த வாரத்தை விட 10 சதவீதம் உயர்வு - வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைகிறது
முகூர்த்த நாளையொட்டி காய்கறி விலை கடந்த வாரத்தைவிட 10 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாகவும், வெங்காயம் விலை குறைந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
காய்கறி விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரித்து வந்த நிலையில், முகூர்த்த நாளையொட்டி தற்போது உயர்ந்து இருக்கிறது.
கடந்த வாரத்தைவிட பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், சுரைக்காய் உள்பட சில காய்கறி விலை சற்று உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பீன்ஸ், அவரைக்காய் கிலோவுக்கு ரூ.15 வரை கடந்த வாரத்தை காட்டிலும் அதிகரித்து இருக்கிறது. தக்காளி விலையை பொறுத்தவரையில் கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
முருங்கைக்காய் விலையும் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.100 வரை குறைந்து, ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை ஆகிறது. மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போனதால் அதன் விலை சரிந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் 10 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாகவும், பொங்கல் பண்டிகை வரை விலை ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் என்றும் சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் சுகுமார் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறும்போது, ‘காய்கறி வரத்து தற்போது குறைந்து தான் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 275 முதல் 290 லாரிகளில் காய்கறி வருகிறது. அடுத்த மாதம் தொடக்கத்தில் இருந்து காய்கறி வரத்து சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
கடந்த 2 வாரத்துக்கு மேலாக வெங்காயம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அதன் விலை குறைய தொடங்கிவிட்டது. மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாரி வெங்காயம் வரத்து சற்று அதிகரித்து இருப்பதும், எகிப்து வெங்காயம் வரத்தும் விலை குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இனிவரக்கூடிய நாட்களிலும் வெங்காயம் விலை படிப்படியாக குறைந்துவிடும் என்றே வியாபாரிகள் கூறுகின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று நாசிக் வெங்காயம் ரூ.120 முதல் ரூ.130 வரையிலும், கர்நாடகா ரூ.100-க்கும், ஆந்திரா ரூ.70 முதல் ரூ.80-க்கும், எகிப்து ரூ.100-க்கும் விற்பனை ஆனது. சாம்பார் வெங்காயம் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் (ஒருகிலோ) வருமாறு:-
தக்காளி- ரூ.20, பீன்ஸ்- ரூ.45 முதல் ரூ.50 வரை, உருளைக்கிழங்கு- ரூ.20 முதல் ரூ.25 வரை, அவரைக்காய்- ரூ.35 முதல் ரூ.45 வரை, சவ்சவ்- ரூ.10, வெள்ளரிக்காய்- ரூ.20 முதல் ரூ.25 வரை, பீட்ரூட்- ரூ.35 முதல் ரூ.45 வரை, வெண்டைக்காய்- ரூ.30 முதல் ரூ.35 வரை, கத்தரிக்காய்- ரூ.20 முதல் ரூ.25 வரை, பீர்க்கங்காய்- ரூ.30, முள்ளங்கி- ரூ.15 முதல் ரூ.20 வரை, புடலங்காய்- ரூ.20 முதல் ரூ.25 வரை, பாகற்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை, சேனைக்கிழங்கு- ரூ.18 முதல் ரூ.20 வரை, சேப்பக்கிழங்கு- ரூ.25 முதல் ரூ.30 வரை, தேங்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை, பச்சை மொச்சை- ரூ.40, பச்சை பட்டாணி- ரூ.40, சுரைக்காய்- ரூ.30, வாழைக்காய்(காய் ஒன்று)- ரூ.10.

Related Tags :
Next Story