தஞ்சையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் ஆய்வு


தஞ்சையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

தஞ்சாவூர்,

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உடன் இருந்தார். கும்பகோணத்தில் உள்ள சிறிய மலர் பள்ளியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச் சாவடி பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பூங்குழலி, தயாள விநாயகன் அமல்ராஜ் ஆகியோர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை நடத்தினர்.

இதை கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், கும்பகோணம் தாசில்தார் பாலசுப்பிரமணியன், துணை வட்டா ரவளர்ச்சி அலுவலர் சந்தானகிரு‌‌ஷ்ணன் உடன் இருந்தனர். பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர்கள் 1,631 பேர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவையாறில் நடந்த தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சாமிநாதன், சுஜாதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story