ஊரக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களாக 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-
அரியலூர் - டி.எஸ்.ராஜசேகர், கோவை- ஜி.கோவிந்தராஜ், கடலூர்- சி.முனியநாதன், தர்மபுரி- டி.பி.ராஜேஷ், திண்டுக்கல்- எம்.எஸ்.சண்முகம், ஈரோடு- கே.விவேகானந்தன், கன்னியாகுமரி- எஸ்.நாகராஜன், கரூர்-என்.வெங்கடாசலம், கிருஷ்ணகிரி- டி.ஆபிரகாம், மதுரை- என்.சுப்பையன், நாகப்பட்டினம்- வி.தட்சிணாமூர்த்தி, நாமக்கல்- டி.ஜெகன்நாதன், பெரம்பலூர்- அனில்மேஷ்ராம், புதுக்கோட்டை- எஸ்.அமிர்த ஜோதி, ராமநாதபுரம்- அதுல் ஆனந்த்.
சேலம்- சி.காமராஜ், சிவகங்கை- எம்.கருணாகரன், தஞ்சாவூர்- எஸ்.அனீஸ்சேகர், நீலகிரி- பி.ஜோதி நிர்மலாசாமி, தேனி- எம்.ஆசியா மரியம், தூத்துக்குடி- வி.சம்பத், திருச்சி- எம்.லட்சுமி, திருப்பூர்- ஆர்.கஜலட்சுமி, திருவள்ளூர்- ஏ.ஞானசேகரன், திருவண்ணாமலை- இ.சுந்தரவல்லி, திருவாரூர்- கவிதா ராமு, விருதுநகர்- வி.அமுதவல்லி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story