கள்ளக்குறிச்சியில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் - கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடந்தது
கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலவலர் சங்கீதா, சமுக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் சரவணன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் பிரகாஷ்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, வீட்டுமனைப்பட்டா, குடும்பஅட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 438 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டார். இதில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் ரகோத்தமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story