ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட: வருமான வரித்துறை பதவியை ராஜினாமா செய்த பெண் அதிகாரி


ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட: வருமான வரித்துறை பதவியை ராஜினாமா செய்த பெண் அதிகாரி
x
தினத்தந்தி 17 Dec 2019 4:15 AM IST (Updated: 17 Dec 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட, ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் உதவி அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள சோழவரம் ஊராட்சியில் வசிப்பவர் பிரபாகரன் (வயது 54). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். தற்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீட்டின்படி, அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபாகரனின் மனைவி சாந்தகுமாரி (52) போட்டியிட முடிவு செய்தார். இவர் சென்னை வருமான வரித்துறையில் உதவி ஆணையராக வேலை செய்து வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட விரும்பியதால் பணியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர், சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட, ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் உதவி அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். சாந்தகுமாரி அரசு வேலை பதவிக்காலம் முடிய இன்னும் 8 ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story