குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ரெயில் மறியல் - 43 பேர் கைது


குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ரெயில் மறியல் - 43 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2019 3:45 AM IST (Updated: 17 Dec 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர், 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசாரின் தடுப்புகளையும் மீறி மாணவர்கள் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் பிரகா‌‌ஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து ரெயில் மறியிலில் ஈடுபட்ட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story