மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் - அமைச்சர் காமராஜ் பேட்டி + "||" + In local elections DMK Reaches a failure Interview with Minister Kamaraj

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் - அமைச்சர் காமராஜ் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் - அமைச்சர் காமராஜ் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் கோட்டூர் தெற்கு ஒன்றியம் கெழுவத்தூர் கிராமத்தில் உள்ள மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். பயத்தோடு தேர்தலை சந்திக்கும் இயக்கம் தி.மு.க. பயமில்லாமல் சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. தேர்தலை எப்படியாவது நிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த தி.மு.க. தோல்வியை கண்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்.

பயிர் காப்பீடு என்பது மத்திய அரசின் திட்டம் எந்த இடங்கள் பாதிப்பு என கணக்கெடுத்து அந்தந்த பகுதிகளில் பயிர் காப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது. காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் விடுபட்ட பிரச்சினை உள்ள சில இடங்களில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறார். பொங்கல் பரிசு வழங்குவதில் எந்த விதமான தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என அரசு தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
இன்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
2. கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வீடு தேடி வரும் - அமைச்சர் காமராஜ் தகவல்
கொரோனா நிவாரண பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் அனைவரின் வீடுகளுக்கும் வந்து சேரும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
3. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த 905 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - அமைச்சர் காமராஜ் தகவல்
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த 905 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
4. டெல்டா மாவட்டங்களில் 1,345 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - அமைச்சர் காமராஜ் தகவல்
டெல்டா மாவட்டங்களில் 1,345 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் காமராஜ் கூறினார்.
5. தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பாக விளங்கும் இயக்கம் அ.தி.மு.க. - வீரவணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேச்சு
தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பாக அ.தி.மு.க. இயக்கம் விளங்கி வருகிறது என திருவாரூரில் நடந்த வீர வணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசினார்.