ஈரோடு ஒன்றியக்குழு அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு - கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டுடன் ஆலோசனை


ஈரோடு ஒன்றியக்குழு அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு - கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 17 Dec 2019 4:00 AM IST (Updated: 17 Dec 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ஒன்றியக்குழு அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டுடன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு மாவட்டங்கள் தோறும் மாநில தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளராக கே.விவேகானந்தன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று ஈரோடு வந்தார்.

அவருக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் நேற்று ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அவர் அங்கு வேட்புமனு பெறும் அதிகாரிகளை சந்தித்து விவரங்கள் கேட்டு அறிந்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த பதிவேடுகள் உள்ளிட்டவற்றையும் அவர் பார்வையிட்டார். இதுபோல் சில வாக்குச்சாவடிகளையும் தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் பார்வையிட்டார்.

முன்னதாக நேற்று காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் மாவட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

ஈரோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி மு.பாலகணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இதுபோல் பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டு அறிந்தார்.

Next Story