சிவகிரி அருகே, கோவிலில் உடைக்கப்பட்ட சாமி சிலைகள் கொடுமுடி கோர்ட்டில் ஒப்படைப்பு


சிவகிரி அருகே, கோவிலில் உடைக்கப்பட்ட சாமி சிலைகள் கொடுமுடி கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 17 Dec 2019 3:45 AM IST (Updated: 17 Dec 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே கோவிலில் உடைக்கப்பட்ட சாமி சிலைகள் கொடுமுடி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

சிவகிரி, 

சிவகிரி அருகே தொப்பபாளையத்தில் காளியண்ணன் கோவில் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் காளியண்ணன் கோவிலில் உள்ள சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்தனர்.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிவகிரி அருகே கோட்டைக்காடு வலசை சேர்ந்த நாகராஜ் (வயது 35), அதே ஊரை சேர்ந்த மாணிக்க சுந்தரம் (37), நாமக்கல் மாவட்டம் மொளசி அருகே உள்ள மண்பச்சபாளியை சேர்ந்த பொன் சரவணன் (40), மொளசி அருகே உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்த பரணிதரன் (21) ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ேமலும் காளியண்ணன் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொடுமுடி கோா்ட்டில் ஒப்படைப்பதற்காக கோவிலில் உடைக்கப்பட்ட சாமி சிலைகளை போலீசார் லாரியில் எடுத்து செல்லும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக கிரேன் கொண்டு வரப்பட்டு சாமி சிலைகள், லாரிகளில் ஏற்றப்பட்டன. பின்னர் அந்த சிலைகள் கொடுமுடி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த பணிகளை கொடுமுடி தாசில்தார் சிவசங்கரன், மண்டல துணை தாசில்தார் மரிய ஜோசப், சிவகிரி ஆய்வாளர் தேன்மொழி ஆகியோர் பார்வையிட்டனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன் தலைைமயில், சிவகிரி சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Next Story