மாமல்லபுரத்திற்கு சீன அமைச்சர்கள் குழுவினர் வருகை: ஜின்பிங்-மோடி ரசித்த இடங்களில் நின்று - புகைப்படம் எடுத்து கொண்டனர்
சீனாவை சேர்ந்த 40 பேர் அடங்கிய மாகாணங்களின் அமைச்சர்கள் குழுவினர் நேற்று மாமல்லபுரம் வருகை தந்து புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். அப்போது அவர்கள் ஜின்பிங்-மோடி ரசித்த இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சுற்றிப்பார்த்து சென்ற பிறகு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக சீன அதிபரின் வருகைக்கு பிறகு சீன நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சீனாவில் உள்ள பீஜியன் மற்றும் குவான்ஷோ ஆகிய 2 மாகாணங்களை சேர்ந்த சீன அமைச்சர்கள் 30 பேர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் உள்ள 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் அடங்கிய குழுவினர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.
முன்னதாக வெண்ணை உருண்டை பாறை பகுதிக்கு வந்த அவர்களை தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமையில், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன் பிறகு சீன மாகாண அமைச்சர்கள் 30 பேரும் தங்கள் நாட்டு அதிபரான ஜின்பிங் சுற்றிப்பார்த்த இடங்களை சுற்றிப்பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், இவர்கள் அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், கிருஷ்ண மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருநாட்டு தலைவர்களும் இணைந்து புகைப்படம் எடுத்த இடங்களில்ல் அவர்களும் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதிலும், குறிப்பாக சீன அதிபரை அதிகம் கவர்ந்த வெண்ணை உருண்டை பாறையை ரசித்து பார்த்த சீன மாகாண அமைச்சர்கள் இப்பாறையை தாங்கி பிடிப்பது போல நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல் ஐந்துரதம் பகுதியில் சீன நாட்டு அதிபர் நாற்காலியில் அமர்ந்து இளநீர் குடித்த அதே இடத்தில், அவர்களும் நாற்காலியில் அமர்ந்து இளநீர் பருகி மகிழ்ந்தனர்.
இவர்களுக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் மற்றும் மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், வ.பாலன், கே.லால்காதர்பாஷா ஆகியோர் எடுத்து கூறி விளக்கினார்கள்.
சீன மாகாண அமைச்சர்கள் வருகையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாமல்லபுரம் சரக உதவி சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story