ஸ்டான்லி ஆஸ்பத்திரியில், நோயாளியின் உறவினர்களிடம் கவரிங் நாணயம் கொடுத்து நூதன மோசடி - இளம்பெண் கைது
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்களிடம் கவரிங் நாணயத்தை கொடுத்து நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்கவரும் அவர்களின் உறவினர்களிடம், இளம்பெண் ஒருவர், தனது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி தன்னிடம் உள்ள 2 கிராம் எடைகொண்ட தங்க நாணயத்தை கொடுத்து அதற்கு பதிலாக ரூ.1,500 தரும்படி கூறுவார்.
அதை கேட்பவர்களும், இளம்பெண் மீது பரிதாபபட்டு அந்த நாணயத்தை பெற்றுக்கொண்டு பணத்தை கொடுத்துவிடுவார்கள். பின்னர் சோதித்து பார்க்கும்போது அது கவரிங் நாணயம் என்பதும், இவ்வாறு அந்த இளம்பெண் மூதாட்டி உள்பட பலரிடம் 2 கிராம் கவரிங் நாணயத்தை கொடுத்து நூதன முறையில் பணம் மோசடி செய்து வருவதும் தெரிந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார், மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா (22 வயது) என்பதும், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பார்க்க வரும் அவர்களின் உறவினர்களை குறிவைத்து இதுபோல் நூதன மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடன் ஆட்டோவில் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பயணம் செய்த 65 வயது மூதாட்டியிடம், வழிப்பறி திருடர்கள் அதிகம் இருப்பதாக கூறி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை கழற்றி வாங்கி, அவரது பணப்பையில் வைக்கும்படி கூறினார். பின்னர் நகையுடன் மூதாட்டியின் பணப்பையை அவர் திருடிச்சென்றதும் தெரிந்தது.
இதையடுத்து பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 3 பவுன் தங்க நகைகள் மற்றும் கவரிங் நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பிரியாவை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story