பெங்களூருவில் எடியூரப்பாவுடன், பி.எல்.சந்தோஷ் திடீர் சந்திப்பு


பெங்களூருவில்  எடியூரப்பாவுடன், பி.எல்.சந்தோஷ் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Dec 2019 4:30 AM IST (Updated: 17 Dec 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பி.எல்.சந்தோஷ் நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சி ஆட்சி பெரும்பான்மை பலத்தை பெற்றது. இதனால் பா.ஜனதாவில் எடியூரப்பாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. மந்திரிசபை விரிவாக்கம் உள்பட முக்கிய முடிவுகளை எடுப்பதில் எடியூரப்பாவின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி எடியூரப்பாவுடன் பேசி, கர்நாடகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து திட்டங்களுக்கு உதவ தயார் என்று உறுதியளித்துள்ளார். இதனால் எடியூரப்பா உற்சாகம் அடைந்துள்ளார். இடைத்தேர்தலுக்கு முன்பு வரை பா.ஜனதா தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோசின் பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூரு தவளகிரி இல்லத்தில் பி.எல்.சந்தோஷ் நேற்று காலை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மந்திரிசபை விரிவாக்கம், யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Next Story