மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 18 Dec 2019 4:00 AM IST (Updated: 18 Dec 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலியானார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சித்தார்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவருடைய மகன் சிவசங்கரன் (வயது 20). இவர் பாலக்கோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

தர்மபுரி அருகே உள்ள அல்லியூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மாணவர் படுகாயமடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள், மாணவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவர் சிவசங்கரன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மதிகோன்பாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் கல்லூரி மாணவர் சிவசங்கரன் பலியானது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story