4 வயது சிறுமி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு தூக்குதண்டனை வழங்கக்கோரி நூதன போராட்டம்
4 வயது சிறுமி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு தூக்குதண்டனை வழங்கக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அந்தோணியார் நகரை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 27-6-2019 அன்று தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி ராஜாம்பாள் (55) உடந்தையாக இருந்துள்ளார். திருமுல்லைவாயல் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதை அறிந்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடந்த 3-ந்தேதியன்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு இருந்த ஒரு மரத்தில் சென்னையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலரான நர்மதா நந்தகுமார் என்பவர் திடீரென மணியை கட்டி தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு மேலாக அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் சார்பு நீதிபதி சரஸ்வதி விரைந்து வந்து அவரிடம் எதற்காக மணி அடிக்கிறீர்கள் என்று கேட்டபோது:-
4 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கல்யாண சுந்தரம், அவரது மனைவி ராஜாம்பாள் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அதற்காக ஆராய்ச்சி மணி அடித்து நியாயம் கேட்க வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதால் வேறு எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அவரை அனுப்பி வைத்தார்.

Related Tags :
Next Story