திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 18 Dec 2019 4:00 AM IST (Updated: 18 Dec 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை சட்ட கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் திருவள்ளூரில் சட்ட கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் காமராஜர் சிலை பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சட்ட கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Next Story