குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2019 3:45 AM IST (Updated: 18 Dec 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், 

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். மதிவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் போலீஸ் பன்னீர் வரவேற்றார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு துணை நிற்கும் தமிழக அரசின் போக்கை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோ‌‌ஷங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜன், நகர துணைச் செயலாளர் சிவா உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

இேத ேபால் மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெகவீரபாண்டியன், பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மூவலூர் மூர்த்தி, இளையபெருமாள், மங்கைசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அலெக்சாண்டர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மையினர், ஈழத்தமிழர் ஆகியோருக்கு துரோகம் செய்யும் வகையில் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story