செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு
செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
செங்கோட்டை,
செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று காலை ஆய்வு செய்ய சென்றார். அவரை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணா வரவேற்றார். பின்னர் நோயாளிகளை சந் தித்து நலம் விசாரித்தார். ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று அவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ பிரிவு கட்டிடங்கள், மகப்பேறு பிரிவு கட்டிடங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி பார்த்தார்.
தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் ஆஸ்பத்திரியை குறைபாடு இல்லாமல் சுற்றுப்புற சூழலுக்கு தகுந்தபடி சுத்தமாக வைத்திருப்பதாக கூறி, மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணாவை, கலெக்டர் பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை தாசில் தார் ஓசானா பெர்னாண்டோ, டாக்டர் தமிழரசன், தலைமை செவிலியர் ரோஸ்லின், அலுவலக கண்காணிப்பாளர் பாஸ்கர், ஆய்வக நுட்பனர் ஹரிஹர நாராயணன், மருந்தாளுனர் அப்பாஸ் மீரான், சுகாதார பார்வையாளர் முகம் மது அம்மாள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story