ஆரல்வாய்மொழியில் பரிதாபம்: மகளிர் சுயஉதவிக்குழு நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை


ஆரல்வாய்மொழியில் பரிதாபம்: மகளிர் சுயஉதவிக்குழு நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Dec 2019 4:15 AM IST (Updated: 18 Dec 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில், கடன் பிரச்சினையில்மகளிர் சுயஉதவிக்குழு பொருளாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம்ஆரல்வாய்மொழி குமாரபுரம் ரேஷன்கடை தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி கவிதா(வயது 37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.கவிதா அப்பகுதியில் மகளிர் சுயஉதவி குழுவில் பொருளாளராக உள்ளார். மேலும், மாத ஏலச்சீட்டும் நடத்தி வந்தார்.

சுய உதவிக்குழு மற்றும், ஏலச்சீட்டு நடத்தியதிலும் பணப்பிரச்சினை ஏற்பட்டது. மேலும் சீட்டு நடத்தியதில் நஷ்டமும் ஏற்பட்டது. இதன்காரணமாக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன்களை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லையாம். எனவே கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கவிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் கவிதா தூக்கில் தொங்குவதை பார்த்து அவரது மகன் அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு வந்தனர்.

பின்னர், இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சங்கர்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவிதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கடன் பிரச்சினையில் மகளிர் சுயஉதவி குழு நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story