சிறுமியை தாயாக்கிய வழக்கில்: தந்தைக்கு ஆயுள் தண்டனை - மங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை தாயாக்கிய வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மங்களூரு,
மங்களூரு நகர் பாண்டேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பையா (வயது 36). கூலி தொழிலாளி. கடந்த 2016-ம் ஆண்டு இவருடைய மனைவி 2-வது பிரசவத்துக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தனர். இதனால் கிஷோரும், அவருடைய மூத்த மகளான 13 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். இந்த நிலையில், கிஷோர் தன்னுடைய மகள் என்று கூட பார்க்காமல் தனது காம இச்சையை தீர்த்துக்கொண்டார்.
அவர் தனது மகளான சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால், குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.
இதனை பயன்படுத்திக் கொண்ட கிஷோர், தொடர்ந்து தனது மகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளாள். ஆனாலும் இதுபற்றி அவள் யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் அவளுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் தாய், அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிறுமியிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தாயிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதை கேட்டு அவர் மேலும் அதிர்ந்து போனார். இதற்கிடையே சில நாட்கள் கழித்து சிறுமிக்கு பிரசவம் ஆனது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய், பாண்டேஸ்வர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 2017-ம் ஆண்டு கிஷோரை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார், மங்களூரு சிறப்பு கோர்ட்டில் (போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு) கிஷோர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பாண்டேஸ்வர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவதி, விசாரணை நடத்தி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு மங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. கிஷோருக்கும், அவருடைய மகளான சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி பல்லவி தீர்ப்பு வழங்கினார். அதில், மரபணு சோதனை அறிக்கையில் கிஷோர் தான் சிறுமியை பலாத்காரம் செய்து தாயாக்கியது உறுதி செய்யப்பட்டதால் கிஷோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவர் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story