விபத்துகளை தடுக்க சூரிய சக்தியால் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள்
விபத்துகளை தடுக்க சூரிய சக்தியால் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் வைக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி,
புதுவை மரப்பாலத்தில் இருந்து ரெட்டிச்சாவடி வரை இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சாலையி்ன் நடுவில் உள்ள தடுப்புகளை கவனிக்காமல் வாகன ஓட்டுனர்கள் தூக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
மரப்பாலம் சந்திப்பு முதல் ரெட்டிச்சாவடி மலட்டாறு பாலம் வரை 15 இடங்களில் இந்த விளக்குகள் வைக்கப்படுகிறது. குறிப்பாக நைனார் மண்டபம் பகுதியில் கூடுதல் விளக்குகளை அமைக்க பாஸ்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். இந்த விளக்கு முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கக்கூடியது.
இரவு நேரம் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் இந்த எச்சரிக்கை விளக்குகள் எரியும். இதற்காக தேவையான மின்சாரத்தை தயார் செய்யும் வகையில் விளக்கு கம்பத்தில் சோலார் பேனல்களும் பொருத்தப்படுகிறது.
இந்த பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் ராஜசேகர், உதவி பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலை பொறியாளர் மதியழகன், ஆய்வாளர் பழனி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய விபத்துகளை தடுக்க சாலைகளில் ஆங்காங்கே எச்சரிக்கை விளக்குகளை பொருத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அதன்படி தற்போது இந்த எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
மரப்பாலம் சந்திப்பு முதல் ரெட்டிச்சாவடி மலட்டாறு பாலம் வரை 15 இடங்களில் இந்த விளக்குகள் வைக்கப்படுகிறது. குறிப்பாக நைனார் மண்டபம் பகுதியில் கூடுதல் விளக்குகளை அமைக்க பாஸ்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். இந்த விளக்கு முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கக்கூடியது.
இரவு நேரம் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் இந்த எச்சரிக்கை விளக்குகள் எரியும். இதற்காக தேவையான மின்சாரத்தை தயார் செய்யும் வகையில் விளக்கு கம்பத்தில் சோலார் பேனல்களும் பொருத்தப்படுகிறது.
இந்த பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் ராஜசேகர், உதவி பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலை பொறியாளர் மதியழகன், ஆய்வாளர் பழனி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story