மேல்மலையனூரில், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் - லாட்டரி வியாபாரி மீது வழக்கு


மேல்மலையனூரில், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் - லாட்டரி வியாபாரி மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Dec 2019 3:30 AM IST (Updated: 18 Dec 2019 8:06 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூரில், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த லாட்டரி வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

மேல்மலையனூர்,

வளத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மேல்மலையனூர் பெரிய தெருவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிந்தார். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த மாயக்கிருஷ்ணன்(51) என்பவரை பிடித்து கைது செய்ய முயன்றார். 

அப்போது மாயக்கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தனை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்த புகாரின்பேரில் லாட்டரி வியாபாரி மாயக்கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story