கோவையில், பெரிய வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்தது - தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை


கோவையில், பெரிய வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்தது - தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை
x
தினத்தந்தி 19 Dec 2019 4:15 AM IST (Updated: 18 Dec 2019 10:27 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பெரிய வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்தது. வரத்து அதிகரித்ததால் தக்காளி கிலோரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை,

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளஎம்.ஜி.ஆர்.மொத்த காய்கறிமார்க்கெட்டுக்குமராட்டியம், கர்நாடகாவில் இருந்து பெரிய வெங்காயம் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. வழக்கமானநாட்களில்கோவைக்கு 300டன்பெரிய வெங்காயம் வரும். ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அங்கிருந்து வரும் வெங்காயவரத்து குறைந்ததால்அதன்விலை கிலோரூ.200-ஐ தொட்டது.இதேநிலைநாடு முழுவதும் நிலவியது.

இந்த நிலையில் எகிப்து, துருக்கிஉள்பட பல்வேறுநாடுகளிலிருந்துபெரிய வெங்காயம் இறக்குமதிசெய்யப்பட்டது. அதன்பின்னர் வெங்காய விலை ஓரளவு குறைந்தது.இருந்தபோதிலும்இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க கோவையில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும்,மராட்டியம்மற்றும் கர்நாடகாவில் இருந்து சமீபத்தில் வெங்காயம் வரத்தொடங்கியது. இதனால் வெங்காயம் கிலோரூ.130-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நல்ல தரமான பெரிய வெங்காயத்தின்விலை கிலோரூ.160 முதல்ரூ.170-வரைவிற்பனையாகிறது. இதுகுறித்து கோவைஎம்.ஜி.ஆர்.மொத்த காய்கறிமார்க்கெட்வியாபாரிராஜேந்திரன்கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தில் தற்போது அறுவடைசெய்யப்படும்பெரியவெங்காயம்லாரிகளில் சுமார் ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து கொண்டுவரப்படுகிறது. 40 மணி நேரம் அவை லாரியில்இருப்பதால்அழுகி விடுகிறது.இதற்கு காரணம்அவை ஈரமாக இருப்பது தான். ஆனால் நன்கு காய்ந்த பெரிய வெங்காயம் 40 மணி நேரம் லாரியில் கொண்டுவரப்பட்டாலும்அவை அழுகாது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வரும் வெங்காயம் அழுகி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்பதால் அவற்றை வியாபாரிகள் கொண்டு வருவதில்லை. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இது இன்னும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும். வருகிற ஜனவரி மாதம்மராட்டியம்மற்றும் கர்நாடகாவில் அறுவடை தொடங்கினால் தான் வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளது.

இதேபோல சின்ன வெங்காயத்தின் வரத்துகுறைந்துள்ளதால்விலை கணிசமாகஉயர்ந்துள்ளது. தற்போது ராசிபுரத்தில் இருந்து கோவைக்கு வரும் சின்ன வெங்காயம் போதுமானதாக இல்லை என்பதால் அதன் விலை ஒரு கிலோரூ.150 முதல்ரூ.160 வரை விற்பனையாகிறது.கோவை மாவட்டம்மதுக்கரை,கிணத்துக்கடவு,நாச்சிப்பாளையம்ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோநாட்டு தக்காளிரூ.10-க்கும், ஒரு கிலோ ஆப்பிள் தக்காளிரூ.15-க்கும்விற்பனையாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story