போக்சோ வழக்குகளை விசாரிக்க கோவையில் சிறப்பு கோர்ட்டு - மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார்
போக்சோ வழக்குகளை விசாரிக்க கோவையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டை மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார்.
கோவை,
பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகள் மற்றும்சிறுவர்களை பாதுகாக்கும்போக்சோசட்டம் கடந்த 2012-ம்ஆண்டு கொண்டுவரப்பட்டது.இச்சட்டத்தின்படிகுற்றவாளிக்கு குறைந்தபட்சம்7ஆண்டு சிறைஅல்லது அதிகபட்சமாக ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது.
ஆனால் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த காரணத்தால் கடந்த 2018-ம் ஆண்டுபோக்சோசட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்டால்அதிகபட்சமாக தூக்கு தண்டனைவிதிக்கும் வகையில்சட்ட திருத்தம்செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
போக்சோவழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும்சிறப்பு கோர்ட்டுகளைதிறக்க அனுமதிஅளிக்கப்பட்டது. அதன்படி சென்னையில்போக்சோவழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு திறக்கப்பட்டு உள்ளது. சென்னைக்குஅடுத்தபடியாக கோவையில்போக்சோ வழக்கை விசாரிக்கசிறப்பு கோர்ட்டுஅமைக்கப்பட்டு உள்ளது. கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் குற்றவியல்நீதிமன்ற கட்டிடத்தில்தரைத்தளத்தில்இந்த கோர்ட்டுஅமைக்கப்பட்டுஇருக்கிறது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. கோவை மாவட்ட முதன்மை நீதிபதிசக்திவேல்புதிய கோர்ட்டை திறந்து வைத்தார். இதில் நீதிபதிகள்ராதிகா, குணசேகரன்,ரவி,மாவட்ட போலீஸ்சூப்பிரண்டுசுஜித்குமார்மற்றும் அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
போக்சோகோர்ட்டில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள்உட்காருவதற்கானஇருக்கை வசதி,விளையாட்டு சைக்கிள்கள்ஆகியவையும்வைக்கப்பட்டுள்ளன. கோவை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்த 120போக்சோவழக்குகள்,போக்சோசிறப்புகோர்ட்டுக்குஉடனடியாக மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியது. நீதிபதிராதிகாசிறப்பு கோர்ட்டுநீதிபதியாக பொறுப்புவகித்து நேற்று விசாரணையை தொடங்கினார். துடியலூரில்6வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள்இந்த கோர்ட்டில்விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story