தஞ்சை அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்களை நிமிர்த்தி சணல் மூலம் கட்டும் பணி
தஞ்சை அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்களை நிமிர்த்தி சணல் மூலம் கட்டும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததாலும், ஆறுகளில் தண்ணீர் செல்வதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் சம்பா, தாளடி சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்பட்ட சம்பா நெற்பயிர்கள் நன்றாக விளைந்து காணப் படுகிறது.
தஞ்சையை அடுத்த மடிகை, துறையூர் பகுதியில் ஆற்றுப்பாசனம் மூலம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்கள் நன்றாக விளைந்து கதிர் பிடித்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விளைந்த நெற்பயிர்கள் எல்லாம் பெரும்பாலான இடங்களில் சாய்ந்து விட்டன.
மடிகை, துறையூர் பகுதியில் மட்டும் 50 ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இவைகள் எல்லாம் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யக் கூடியவையாகும். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மடிகையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் 1 ஏக்கரில் சாய்ந்தன. அந்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து விட்டனர். துறையூரில் சாய்ந்த நெற்பயிர்களை நிமிர்த்தி சணல் மூலம் கட்டும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, நெல் சாகுபடி என்பது எவ்வளவு சிரமமானது என்று நேரில் பார்த்தால்தான் தெரியும். இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் மழையினால் சாய்ந்து விட்டன. சாய்ந்த பயிர்களை சணல் மூலம் சேர்த்து கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இனிமேல் மழை பெய்யாமல் இருந்தால் பயிர்களை காப்பாற்றி விடலாம். ஆனால் தொடர்ந்து மழை பெய்தால் சாய்ந்த பயிர்கள் முளைக்க தொடங்கிவிடும்.
அப்படி முளைத்து விட்டால் நஷ்டம்தான் ஏற்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நல்ல விளைச்சல் வரும் என எதிர்பார்த்த நேரத்தில் மழை பெய்து வருவது வருத்தம் அளிக்கிறது. பின்பட்ட சம்பா சாகுபடிக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முன்பட்ட சாகுபடி செய்தவர்களுக்கு கவலை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்றனர்.

Related Tags :
Next Story