‘ஹெல்மெட்’ வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் போட்டி, போட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர்


‘ஹெல்மெட்’ வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் போட்டி, போட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 19 Dec 2019 4:15 AM IST (Updated: 19 Dec 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

‘ஹெல்மெட்’ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டதால் பொதுமக்கள் போட்டி, போட்டு வாங்கி சென்றனர்.

சேலம்,

கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சேலம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டிற்கு அதிகளவில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய மற்றும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய செடிகள் அழுகியதால் அதன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் அதிகமான விலைக்கு வெங்காயம் விற்பனையானது. சேலம் மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.140 வரையும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.180 -க்கு மேலும் விற்பனை செய்யப்பட்டது.

இலவசம்

இதனிடையே பெரிய வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்ததால் பொதுமக்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இந்தநிலையில் சேலத்தில் கோட்டை பகுதியில் உள்ள ஒரு ‘ஹெல்மெட்’ விற்பனை செய்யும் கடையில் ‘ஹெல்மெட்’ வாங்கினால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் இலவசம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியானது. இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் போட்டி, போட்டுக்கொண்டு ஹெல்மெட் வாங்கி இலவசமாக வெங்காயத்தை பெற்று சென்றனர்.

Next Story