திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய திமிங்கலம்
திருச்செந்தூர் கடலில் திமிங்கலம் கரை ஒதுங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் தோப்பூர் கடற்கரையில் நேற்று முன்தினம் மாலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 7 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்ட அந்த திமிங்கலத்தின் வாய் பகுதியில் காயம் இருந்தது. நீண்ட நேரமாக கடற்கரையில் தத்தளித்த அந்த திமிங்கலம் பின்னர் கடலுக்குள் சென்று விட்டது. ஆழ்கடலில் கப்பல் மோதியதில் அந்த திமிங்கலம் காயம் அடைந்து கரை ஒதுங்கி இருக்கலாம் அல்லது அது கடல் நீரோட்டத்தில் திசைமாறி ஆழம் குறைவான பகுதிக்கு வந்ததால் காயம் அடைந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த திமிங்கலம் அருகில் வேறு இடத்தில் எங்கேனும் கரை ஒதுங்கி இருக்கிறதா என்று கருதி, சுற்று வட்டார கடற்கரை பகுதிகளில் தேடினர். ஆனாலும் அந்த திமிங்கலம் கரை ஒதுங்கவில்லை. எனவே அது ஆழ்கடலுக்குள் சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் மணப்பாடு கடற்கரையில் 100-க்கு மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்தன.
இந்த நிலையில் திருச்செந்தூர் தோப்பூர் கடலில் திமிங்கலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story