காரியாபட்டி அருகே, விஷம் குடித்த காதல் ஜோடி; இளம்பெண் சாவு - காதலனுக்கு தீவிர சிகிச்சை


காரியாபட்டி அருகே, விஷம் குடித்த காதல் ஜோடி; இளம்பெண் சாவு - காதலனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 19 Dec 2019 3:45 AM IST (Updated: 19 Dec 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே காதல் ஜோடி விஷம் குடித்தது. இதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது மேல கஞ்சிரங்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவரது மகன் சரவணன் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த இருளாண்டி என்பவரது மகள் காளீஸ்வரி என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

பெற்றோரை இழந்த காளீஸ்வரி தனது தாய் வழி தாத்தாவான போஸ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் மாயமானார்கள். இதுதொடர்பாக காளீஸ்வரியின் உறவினர்கள் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் காளீஸ்வரி மற்றும் சரவணனை அழைத்து வந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு விசாரணை செய்து சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 45 நாள் சிறைவாசம் அனுபவித்து சரவணன் திரும்பினார்.

சிறையில் இருந்து வெளியே வந்திருந்த சரவணன் நேற்று முன்தினம் மீண்டும் காளீஸ்வரியை அழைத்துச் சென்றுவிட்டார்.

பல இடங்களில் தேடிய நிலையில் நேற்று மேல காஞ்சிரங்குளம் கண்மாய் பகுதியில் விஷம் குடித்து சரவணனும் காளீஸ்வரியும் பேச்சுமூச்சற்று கிடந்தனர்.

அந்த பகுதியில் சென்றவர்கள் பார்த்து தகவல் கூறியதன் பேரில் காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது காளீஸ்வரி இறந்து கிடந்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சரவணனுக்கு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

காளீஸ்வரி உடல் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story